1 நாளாகமம் 25:3
யெகோவாவைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனினிடம் சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் மகன்களாகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Samuel 10:5பின்பு பெலிஸ்தர்களின் முகாம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் வரும்போது, மேடையிலிருந்து இறங்கி வருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தைச் சந்திப்பாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும், மேளமும், நாகசுரமும், சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.
1 Chronicles 15:18இவர்களோடு இரண்டாவது வரிசையாகத் தங்களுடைய சகோதரர்களாகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளர்களையும் நிறுத்தினார்கள்.
1 Chronicles 16:41இவர்களோடு ஏமானையும், எதித்தூனையும், பெயர்பெயராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்ற சிலரையும்: யெகோவாவுடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும்,
2 Chronicles 29:14ஏமானின் வம்சத்தாரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் வம்சத்தாரில் செமாயாவும், ஊசியேலும் என்னும் லேவியர்கள் எழும்பி,
Jeremiah 33:11இன்னும் கொண்டாட்டத்தின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணமகனின் சத்தமும், மணமகளின் சத்தமும்: சேனைகளின் யெகோவாவை துதியுங்கள், யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், யெகோவாவுடைய ஆலயத்திற்கு நன்றி பலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்தது போல இருப்பதற்கு தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.