1 Chronicles 5:22
யுத்தம் தேவனால் நடந்ததால் அவர்களுடைய எதிரிகளில் அநேகரை வெட்டி வீழ்த்தினார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகும்வரை இவர்களுடைய இடத்திலே குடியிருந்தார்கள். 1 மனாசேயின் பாதிக்கோத்திரம்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 49:19காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
2 Kings 15:29இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிமக்களைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
1 Chronicles 4:41பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் மறைவிடங்களையும் அழித்து, இந்த நாளிலே இருக்கிறதுபோல, அவர்களை முற்றிலும் அழித்து, அங்கே தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியால், அவர்கள் அந்த இடத்திலே குடியேறினார்கள்.
1 Chronicles 6:26எல்க்கானாவின் மகன்களில் ஒருவன் சோபாய்; இவனுடைய மகன் நாகாத்.
2 Chronicles 32:8அவனோடு இருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய போர்களை நடத்த நம்மோடு இருக்கிறவர் நம்முடைய தேவனாகிய யெகோவாதானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் மக்கள் நம்பிக்கை வைத்தார்கள்.