The Bible Software
bible.software › 1 இராஜாக்கள் › 1 இராஜாக்கள் 20 › 1 இராஜாக்கள் 20:13

1 இராஜாக்கள் 20:13

அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் வந்து: அந்த ஏராளமான மக்கள்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே யெகோவா என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And, behold, there came a prophet unto Ahab king of Israel, saying, Thus saith the LORD, Hast thou seen all this great multitude? behold, I will deliver it into thine hand this day; and thou shalt know that I am the LORD.

In Context

12பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கும்போது, இந்த வார்த்தையைக் கேட்டு, தன்னுடைய ஆட்களை நோக்கி: யுத்தம் செய்ய ஆயத்தம்செய்யுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் யுத்தம்செய்ய ஆயத்தம்செய்தார்கள்.

14யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களைக்கொண்டு என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்.

Read all of 1 இராஜாக்கள் 20

Cross References

Exodus 14:18இப்படி நான் பார்வோனாலும் அவனுடைய இரதங்களாலும் அவனுடைய குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார்.

Joshua 10:8யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.

1 Kings 18:36மாலைபலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய யெகோவாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படிச்செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கச்செய்யும்.

1 Kings 20:28அப்பொழுது தேவனுடைய மனிதன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவா பள்ளத்தாக்குகளின் தேவனாக இல்லாமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர்கள் சொல்லியிருக்கிறபடியால், நான் இந்த ஏராளமான மக்கள் கூட்டத்தையெல்லாம் உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே யெகோவா என்று நீங்கள் அறிவீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

2 Kings 6:8அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாக போர்செய்து, இந்த இந்த இடத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் வேலைக்காரர்களோடு ஆலோசனைசெய்தான்.

2 Kings 13:23ஆனாலும் யெகோவா அவர்களுக்கு மனமிரங்கி, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்க விருப்பமில்லாமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 இராஜாக்கள் 20:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 இராஜாக்கள் 20:121 இராஜாக்கள் 201 இராஜாக்கள் 20:14 →