1 Kings 21:13
அப்பொழுது வஞ்சகமான இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று மக்களுக்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படி அவனைக் கல்லெறிந்து,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
12அவர்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி நாபோத்தை மக்களின் முன்னே நிறுத்தினார்கள்.
14பிறகு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியப்பட்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.
Cross References
Leviticus 24:11அப்பொழுது இஸ்ரவேலைச் சார்ந்த அந்தப் பெண்ணின் மகன் யெகோவாவின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவனுடைய தாயின் பெயர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் மகள்.
Numbers 15:36அப்பொழுது சபையார் எல்லோரும் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனை முகாமிற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான். 1 ஆடையில் தொங்கல்கள்
Deuteronomy 13:10அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவாவை விட்டுவிலகும்படி அவன் உன்னை தூண்டியதால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறிவாயாக.
Deuteronomy 21:21அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிவார்களாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள். 1 பிற சட்டங்கள்
Deuteronomy 22:24அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூச்சலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.
2 Kings 9:26நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவனுடைய மகன்களின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது யெகோவா சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, யெகோவாவுடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.