1 சாமுவேல் 5:9
அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, யெகோவாவுடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் கடுங்கோபமாக இறங்கினது; அந்தப் பட்டணத்தின் மனிதருக்குள் சிறியவர் துவங்கிப் பெரியவர்வரை மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Samuel 5:6அஸ்தோத் ஊர்க்காரர்களை வாதிக்கும்படி யெகோவாவுடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் மக்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
1 Samuel 6:4அதற்கு அவர்கள்: குற்றநிவாரணக் காணிக்கையாக நாங்கள் அவருக்கு எதைச் செலுத்தவேண்டும் என்று கேட்டதற்கு, அவர்கள்: உங்கள் எல்லோருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதை உண்டானதினால், பெலிஸ்தர்களுடைய அதிபதிகளின் எண்ணிக்கைக்குச் சரியாக மூலவியாதியின் சாயலின்படி செய்த ஐந்து பொன் சிலைகளும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.
1 Samuel 7:13இப்படியாக பெலிஸ்தர்கள் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடித் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் யெகோவாவுடைய கை பெலிஸ்தர்களுக்கு எதிராக இருந்தது.
Psalms 78:66தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து, 1 அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார். 1
Amos 9:1ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி தூணின் உச்சியை அடித்து, அவைகளை அவர்கள் எல்லோருடைய தலையின்மேலும் விழும்படி உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் வாளால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.