1 தீமோத்தேயு 1:17
நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Chronicles 29:11யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர்.
Psalms 10:16யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்; 1 அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள். 1
Psalms 45:1என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; 1 நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; 1 என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி. 1
Psalms 47:6தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; 1 நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். 1
Psalms 72:18இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; 1 அவரே அதிசயங்களைச் செய்கிறவர். 1
Psalms 106:48இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா 1 அநாதியாக என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். 1 மக்களெல்லோரும் ஆமென், என்பார்களாக, 1 அல்லேலூயா.