2 Chronicles 3:1
பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் யெகோவாவினால் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த இடத்திலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
2அவன் தான் ஆட்சிசெய்த நான்காம் வருடம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.
Cross References
Genesis 22:14ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யேகோவாயீரே + 22:14 யெகோவாவால் கொடுக்கப்படும் என்று பெயரிட்டான்; அதனால் யெகோவாவுடைய மலையில் பார்த்துக்கொள்ளப்படும்” என்று இந்த நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
2 Samuel 24:18அன்றையதினம் காத் என்பவன் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனான அர்வனாவின் களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
1 Kings 6:6கீழே இருக்கிற சுற்றுச்சுவர் 7.6 அடி அகலமும், நடுவே இருக்கிறது 9 அடி அகலமும், மூன்றாவதாக இருக்கிறது 10.6 அடி அகலமுமாக இருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய விட்டத்தினாலே தாங்காதபடி ஆலயத்தைச் சுற்றிலும் வெளிப்புறமாக ஒட்டுச்சுவர்களைக் கட்டினான்.
1 Chronicles 22:1அப்பொழுது தாவீது: தேவனாகிய யெகோவாவுடைய ஆலயம் இருக்கும் இடம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் இடமும் இதுவே என்றான். 1 ஆலயத்திற்கான ஆயத்தம்