2 Chronicles 30:19
எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்செய்து, தங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேட, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தம் அடையாமலிருந்தாலும், கிருபையுள்ள யெகோவா அவர்கள் எல்லோருக்கும் மன்னிப்பாராக என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
20யெகோவா எசேக்கியாவின் விண்ணப்பத்தைக்கேட்டு, மக்களுக்கு உதவி செய்தார்.
Cross References
Leviticus 15:31“இஸ்ரவேல் மக்கள் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் மரணமடையாமலிருக்க, இப்படி நீங்கள் அவர்களுடைய தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைப்பீர்களாக”.
Leviticus 22:3அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் யாராவது தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகள் அருகில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இல்லாதபடி அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் யெகோவா.
Numbers 19:13செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் யெகோவாவின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இல்லாமல் அழிந்துபோவான்; தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவனுடைய தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.
1 Chronicles 29:18ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவே, உமது மக்களின் இருதயத்தில் உண்டான இந்த சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும்.
2 Chronicles 20:33ஆனாலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; மக்கள் தங்கள் இருதயத்தைத் தங்கள் முற்பிதாக்களின் தேவனுக்கு இன்னும் நேராக்காதிருந்தார்கள்.
Ezra 7:10யெகோவாவுடைய வேதத்தை ஆராயவும், அதன்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். 1 ராஜாவாகிய அர்தசஷ்டா எஸ்றாவுக்கு எழுதின கடிதம்