2 Chronicles 31:19
ஆசாரியர்களில் அனைத்து ஆண்பிள்ளைகளுக்கும் லேவியர்களுக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லோருக்கும் சம்பளம் கொடுக்க, ஆசாரியர்களுடைய ஒவ்வொரு பட்டணத்தைச்சார்ந்த வெளிநிலங்களிலும் ஆரோன் வம்சத்தாரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 25:32லேவியர்களின் சொந்த இடமாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர்கள் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம்.
Numbers 35:2“இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தை லேவியர்கள் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
1 Chronicles 6:60பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
2 Chronicles 31:12அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்செய்யப்பட்டவைகளையும் உண்மையாக எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாக இருந்தான்.