2 Chronicles 35:3
இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியர்களை நோக்கி: பரிசுத்தப்பெட்டியை தாவீதின் மகனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதை சுமக்கும் பொறுப்பு உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கும், அவருடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியம்செய்து,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Numbers 4:15முகாம் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய எல்லா பணிப்பொருட்களையும் மூடிவைத்தபின்பு, கோகாத் சந்ததியார்கள் அதை எடுத்துக்கொண்டுபோவதற்கு வரவேண்டும்; அவர்கள் சாகாதபடிக்கு பரிசுத்தமானதைத் தொடாமலிருக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் சந்ததியினர் சுமக்கும் சுமை இதுவே.
Numbers 16:9யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம் அருகில் சேரச்செய்யும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும்,
1 Chronicles 23:26இனி லேவியர்கள் தங்குமிடத்தையாவது அதின் ஊழியத்தில் அதின் பணிபொருட்களில் எதையாவது சுமக்கத் தேவையில்லை என்றும்,
2 Chronicles 8:11சாலொமோன்: யெகோவாவுடைய பெட்டி வந்த இடங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரண்மனையிலே என் மனைவி குடியிருக்கக்கூடாது என்று சொல்லி, பார்வோனின் மகளைத் தாவீதின் நகரத்திலிருந்து, தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரச்செய்தான்.
2 Chronicles 17:8இவர்களோடுகூட செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியர்களையும், இவர்களோடுகூட ஆசாரியரான எலிஷாமாவையும், யோராமையும் அனுப்பினான்.
2 Chronicles 30:22யெகோவாவுக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள அனைத்து லேவியரோடும் எசேக்கியா ஆதரவாகப் பேசினான்; இப்படி அவர்கள் பண்டிகையின் ஏழு நாட்களும் சாப்பிட்டு, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, தங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை துதித்துக்கொண்டிருந்தார்கள்.