2 Chronicles 6:24
உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததினிமித்தம் எதிரிக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 26:37துரத்துவார் இல்லாமல், பட்டயத்திற்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் எதிரிகளுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இருக்காது.
Deuteronomy 4:29அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய யெகோவாவை தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.
Deuteronomy 28:48சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், யெகோவா உனக்கு விரோதமாக அனுப்பும் எதிரிகளுக்கு வேலைசெய்வாய்; அவர்கள் + 28:48 யெகோவா உன்னை முற்றிலும் அழிக்கும்வரை, இரும்பு நுகத்தை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.
Joshua 7:8ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன்.
Judges 2:11அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்து, பாகால்களைத் தொழுது,
1 Kings 8:33உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் எதிரிகளுக்கு முன்பாக தோற்றுப்போய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, இந்த ஆலயத்திற்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,