2 Chronicles 8:6
பாலாத்தையும், தனக்கு இருக்கிற, பொருட்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் சகல பட்டணங்களையும், குதிரை வீரர்கள் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும் தான் ஆளும் தேசமெங்கும் தனக்கு விருப்பமானதையெல்லாம் கட்டினான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Kings 7:2அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது 900 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமுமாக இருந்தது; அதைக் கேதுரு மரத்தாலான உத்திரங்கள் கட்டப்பட்ட கேதுருமரத்தூண்களின் நான்கு வரிசைகளின்மேல் கட்டினான்.
1 Kings 10:26சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு 1,400 இரதங்கள் இருந்தது, 12,000 குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.
2 Chronicles 8:4அவன் வனாந்திரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே பொருட்களை வைக்கும் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்.
Ecclesiastes 2:4நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கினேன்.
Song of Solomon 4:8லீபனோனிலிருந்து என்னோடே வா, 1 என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. 1 அமனாவின் உச்சியிலிருந்தும், 1 சேனீர் எர்மோனின் உச்சியிலிருந்தும், 1 சிங்கங்களின் குகைகளிலிருந்தும், 1 சிறுத்தைகளின் மலைகளிலிருந்தும் கீழே + 4:8 கீழே பார் இறங்கி வா. 1