2 இராஜாக்கள் 2:11
அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகும்போது, இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 5:24ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
2 Kings 6:17அப்பொழுது எலிசா விண்ணப்பம்செய்து: யெகோவாவே, இவன் பார்க்கும்படி இவனுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே யெகோவா அந்த வேலைக்காரனுடைய கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
Psalms 104:3தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, 1 மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார். 1
Ezekiel 1:4இதோ, வடக்கேயிருந்து புயல்காற்றும் பெரிய மேகமும், அதோடு கலந்த நெருப்பும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் நெருப்புக்குள்ளிருந்து வெளிப்பட்ட உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமும் உண்டாயிருந்தது.
Habakkuk 3:8யெகோவா நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? 1 தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் காப்பாற்றுகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, 1 உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ? 1
Zechariah 6:1நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு மலைகளின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நான்கு இரதங்களைக் கண்டேன்; அந்த மலைகள் வெண்கல மலைகளாயிருந்தன.