2 இராஜாக்கள் 2:5
எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Joshua 1:1யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே இறந்தபின்பு, யெகோவா மோசேயின் ஊழியக்காரனான நூனின் மகனாகிய யோசுவாவைப் பார்த்து:
1 Kings 20:35அப்பொழுது தீர்க்கதரிசிகளின் மகன்களில் ஒருவன் யெகோவாவுடைய வார்த்தையின்படி தன்னுடைய நண்பனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனிதன் அவனைப் பார்த்து அடிக்கமாட்டேன் என்றான்.
2 Kings 4:1தீர்க்கதரிசிகளுடைய கூட்டத்தாரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு பெண் எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் கணவன் இறந்துபோனான்; உமது அடியான் யெகோவாவுக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு மகன்களையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.
2 Kings 6:1தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
Ecclesiastes 3:7கிழிக்க ஒரு காலம் உண்டு, தைக்க ஒரு காலம் உண்டு; 1 மவுனமாக இருக்க ஒரு காலம் உண்டு, பேச ஒரு காலம் உண்டு; 1
Amos 7:14ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதிலாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் மகனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பதனிடுகிறவனுமாக + 7:14 மேற்பார்வையாளர் இருந்தேன்.