2 சாமுவேல் 10:6
அம்மோன் மக்கள் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, தூதுவர்களை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியர்களிலும், சோபாவிலிருக்கிற சீரியர்களிலும் 20,000 காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவிடம் 1,000 பேரையும், தோபிலிருக்கிற 12,000 பேரையும், கூலிப்படையாக வரவழைத்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
7அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பலசாலிகளான எல்லா இராணுவங்களையும் அனுப்பினான்.
Cross References
Genesis 34:30அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: “இந்த தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கச்செய்தீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாக ஒன்றுசேர்ந்து, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே” என்றான்.
Deuteronomy 3:14மனாசேயின் மகனாகிய யாவீர் அர்கோப் பகுதி முழுவதையும் கெசூரியர்கள் மாகாத்தியர்கள் என்பவர்களுடைய எல்லைவரை கட்டிக்கொண்டு, அதற்குத் தன் பெயரின்படியே பாசான் அவோத்யாயீர் + 3:14 யாவிரின் கிராமங்கள். என்று பெயரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.
Joshua 13:13இஸ்ரவேல் மக்களோ கெசூரியர்களையும் மாகாத்தியர்களையும் துரத்திவிடவில்லை, கெசூரியர்களும் மாகாத்தியர்களும் இந்தநாள்வரை இஸ்ரவேலின் நடுவில் குடியிருக்கிறார்கள்.
Judges 11:5அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்யும்போது கீலேயாத்தின் மூப்பர்கள் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,
1 Samuel 13:4முகாமிட்டிருந்த பெலிஸ்தர்களைச் சவுல் முறியடித்தான் என்றும், இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, மக்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
2 Samuel 8:3ரேகோபின் மகனான ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐப்பிராத்து நதி அருகில் இருக்கிற இடத்தைத் திரும்பத் தனக்குக் கைப்பற்றுவதற்காகச் சென்றபோது, தாவீது அவனையும் முறியடித்து,