2 சாமுவேல் 18:28
அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு எதிராகத் தங்கள் கைகளை எடுத்த மனிதர்களை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனான யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 14:20உன் எதிரிகளை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
1 Samuel 24:18நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கச்செய்தாய்; யெகோவா என்னை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்று போடவில்லை.
2 Samuel 1:2மூன்றாம் நாளிலே ஒரு மனிதன் சவுலின் முகாமிலிருந்து புறப்பட்டு, தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தன்னுடைய தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, தாவீதிடம் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான்.
2 Samuel 22:27புனிதனுக்கு நீர் புனிதராகவும், 1 மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். 1
Psalms 31:8எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல், 1 என்னுடைய பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர். 1
Psalms 124:6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் 1 இருக்கிற யெகோவாவுக்கு நன்றி. 1