Acts 2:1
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்திருந்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And when the day of Pentecost was fully come, they were all with one accord in one place.
In Context
Cross References
Exodus 23:16நீ வயலில் விதைத்த உன்னுடைய பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருடமுடிவிலே நீ வயலில் உன்னுடைய வேலைகளின் பலனைச் சேர்த்து முடிந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி.
Leviticus 23:15“நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் முடிந்தபின்பு,
Deuteronomy 16:9“ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் துவங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.
2 Chronicles 30:12யூதாவிலும் யெகோவாவுடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும், கட்டளையிட்ட முறையின்படி செய்வதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்தினது.
Jeremiah 32:39அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்சந்ததியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாக எல்லா நாட்களிலும் எனக்குப் பயப்படுவதற்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,
Acts 1:13அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.