Daniel 5:28
பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டு, மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தம் என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
PERES; Thy kingdom is divided, and given to the Medes and Persians.
In Context
27தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறைவுள்ளதாகக் காணப்பட்டாய் என்றும்,
Cross References
2 Chronicles 36:23அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்செய்தான்.
Isaiah 21:2பயங்கரமான காட்சி எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்செய்து, பாழாக்குகிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றுகைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியச்செய்தேன்.
Isaiah 47:11ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று உனக்குத் தெரியாது; உனக்குத் துன்பம் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்கு உடனடியாக உண்டாகும் அழிவு உன்மேல் வரும்.
Jeremiah 51:28மேதியா தேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் எல்லா அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்திற்குக் கீழான எல்லா தேசத்தாருமாகிய மக்களை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.
Daniel 2:39உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்ஜியம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்ஜியம் ஒன்று எழும்பும்.
Daniel 6:28தரியுவின் ஆட்சிக்காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ஆட்சிக்காலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாக இருந்தது.