Daniel 9:8
ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததினால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் முற்பிதாக்களும் வெட்கத்திற்குரியவர்களானோம்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
2 Kings 21:15தங்கள் பகைஞர்களுக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாகப் போவார்கள் என்றார்.
Nehemiah 1:6உமது அடியார்களாகிய இஸ்ரவேல் மக்களுக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் மக்களாகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவிகள் கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என்னுடைய தகப்பன் வீட்டார்களும் பாவம் செய்தோம்.
Jeremiah 7:19அவர்கள் எனக்கா மனவேதனையுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்திற்குள்ளாக அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனவேதனையுண்டாக்குகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Lamentations 1:7தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே 1 எருசலேம் ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; 1 அவளுக்கு உதவிசெய்பவர்கள் இல்லாமல் அவளுடைய மக்கள் விரோதிகளின் கையிலே விழும்போது, 1 பகைவர்கள் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வு நாட்களைக் குறித்து ஏளனம் செய்தார்கள். 1
Lamentations 3:42நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; 1 ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர். 1
Ezekiel 5:6அது அந்நியஜாதிகளைவிட என்னுடைய நியாயங்களையும், தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைவிட என்னுடைய கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என்னுடைய நியாயங்களை வெறுத்து, என்னுடைய கட்டளைகளில் நடக்காமல்போனார்கள்.