உபாகமம் 31:18
அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளுக்காகவும் நான் அந்நாளிலே என் முகத்தை நிச்சயமாகவே மறைப்பேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 34:15அந்த தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்வாயானால், அவர்கள் தங்களுடைய தெய்வங்களைப் பின்பற்றி, விபசாரம் செய்வார்கள், தங்களுடைய தெய்வங்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கும்போது, நீ போய், அவனுடைய பலி செலுத்தியதில் சாப்பிடுவாய்;
Deuteronomy 32:20என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; 1 அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; 1 அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; 1 உண்மையில்லாத பிள்ளைகள். 1
Isaiah 5:25ஆகையால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களுக்கு விரோதமாக மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, மலைகள் அதிரத்தக்கதாகவும், அவர்களுடைய பிணங்கள் நடுவீதிகளில் குப்பை போலாகத்தக்கதாகவும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
Jeremiah 33:5இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பின் காரணமாக நான் என் முகத்தை மறைத்ததினால் என் கோபத்திலும் கடுங்கோபத்திலும் வெட்டப்பட்ட மனிதச் சடலங்களினால் அவைகளை நான் நிறைப்பதற்காகவே, அவர்கள் கல்தேயருடன் போர் செய்யப்போகிறார்கள்.