உபாகமம் 6:5
நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
4“இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா.
6இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருப்பதாக.
Cross References
Deuteronomy 4:29அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய யெகோவாவை தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.
Deuteronomy 11:1“நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய பிரமாணங்களையும், கட்டளைகளையும், நியாயங்களையும், கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக.
Deuteronomy 13:4நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.
Deuteronomy 30:10உன் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் மகிழ்ச்சியாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாக மீண்டும் மகிழ்ச்சியாயிருப்பார். 1 ஜீவனும் மரணமும்
2 Kings 23:25யெகோவாவிடத்திற்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போன்ற ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.
2 Chronicles 34:31ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தன் செயல்கள் மூலமாகக் யெகோவாவைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழு இருதயத்தோடும், தன் முழு ஆத்துமாவோடும், அவருடைய கற்பனைகளையும், அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் யெகோவாவுடைய சந்நிதியில் உடன்படிக்கைசெய்து,