Esther 10:2
பலமும் வல்லமையுமான அவனுடைய எல்லா செயல்களும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் மகத்துவமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நாளாகம புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
1ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், மத்திய தரைக் கடலிலுள்ள தீவுகளின்மேலும், வரியை ஏற்படுத்தினான்.
Cross References
1 Kings 14:19யெரொபெயாம் யுத்தம்செய்ததும் ஆட்சி செய்ததுமான அவனுடைய மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
Esther 2:23அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது உண்மையென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புத்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.
Esther 8:2ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிய தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரண்மனைக்கு அதிகாரியாக வைத்தாள்.
Esther 9:4மொர்தெகாய் ராஜாவின் அரண்மனையில் பெரியவனாக இருந்தான்; அவனுடைய புகழ் எல்லா நாடுகளிலும் பிரபலமானது; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவன் ஆனான்.
Daniel 2:48பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.