Esther 3:13
ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாந் தேதியாகிய ஒரே நாளில் சிறியோர் பெரியோர் குழந்தைகள் பெண்கள் ஆகிய எல்லா யூதர்களையும் கொன்று அழிக்கவும், அவர்களை நொறுக்கவும், தபால்காரர்கள் கையில் ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Samuel 22:19ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும், கைக் குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் கூர்மையான பட்டயத்தால் வெட்டிப்போட்டான்.
Esther 7:4எங்களை அழித்துக் கொல்லும்படி நானும் என்னுடைய மக்களும் விற்கப்பட்டோம்; ஆண்களும், பெண்களும் அடிமைகளாக விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாக இருப்பேன்; இப்பொழுதோ ராஜாவிற்கு உண்டாகும் நஷ்டத்திற்கு அந்த எதிரி உத்திரவாதம் பண்ணமுடியாது என்றாள்.
Esther 8:10அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பெயரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடப்பட்டபின்பு, குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் வேகமாக ஓடுகிற குதிரைகள் மேல்ஏறிப்போகிற தபால்காரர்கள் கையில் அனுப்பப்பட்டது.
Esther 9:1ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, யூதர்களின் பகைவர்கள் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்த நாளிலே, யூதர்களானவர்கள் தங்கள் பகைவர்களை மேற்கொள்ளும்படிக் காரியம் மாறுதலாக முடிந்தது.
Job 9:25என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது; 1 அவைகள் நன்மையைப் பார்க்காமல் பறந்துபோகும். 1
Jeremiah 51:31கடையாந்தர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும், துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், போர்வீரர்கள் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,