bible.software › எஸ்தர் › எஸ்தர் 7 › எஸ்தர் 7:8
எஸ்தர் 7:8
ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வரும்போது, எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரண்மனையில் இருக்கும்போதே என்னுடைய கண்முன்னே இவன் ராணியை பலவந்தம் செய்யவேண்டுமென்று இருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து வந்தவுடனே ஆமானின் முகத்தை மூடினார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then the king returned out of the palace garden into the place of the banquet of wine; and Haman was fallen upon the bed whereon Esther was. Then said the king, Will he force the queen also before me in the house? As the word went out of the king’s mouth, they covered Haman’s face.
In Context
7ராஜா கடுங்கோபத்தோடு திராட்சைரசப் பந்தியைவிட்டு எழுந்து, அரண்மனைத் தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்கு ஆபத்து நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராணியாகிய எஸ்தரிடம் தன்னுடைய உயிருக்காக விண்ணப்பம்செய்ய எழுந்து நின்றான்.
9அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற அதிகாரிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானுடைய வீட்டின் அருகில் நடப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.
Read all of எஸ்தர் 7
Cross References
Esther 6:12பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலுக்குத் திரும்பி வந்தான்; ஆமானோ துக்கப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு விரைவாகப்போனான்.
Isaiah 22:17இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துவதுபோலக் யெகோவா உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாக உன்னை மூடிப்போடுவார்.
This Verse In Other Editions
Study எஸ்தர் 7:8