Exodus 22:11
அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று யெகோவாவின் நாமத்தில் ஆணையிட்டால் அவர்கள் இருவருக்கும் அதுவே நியாயம்தீர்க்கட்டும்; உடையவன் அதை அங்கீகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கத்தேவையில்லை.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
12அது அவனிடமிருந்து திருடப்பட்டுப்போனால், அவன் அதனுடைய எஜமானுக்கு அதற்காக ஈடுகொடுக்கவேண்டும்.
Cross References
Exodus 22:8திருடன் அகப்படாவிட்டால், அந்த வீட்டுக்காரன் தான் பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடம் + 22:8 தேவசமுகத்தில் அவனைக் கொண்டுபோகவேண்டும்.
Leviticus 5:1“சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவிக்காமலிருந்து பாவம்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
1 Kings 2:42ராஜா சீமேயியை அழைத்து: நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவது போகிற நாளிலே சாவாய் என்பதை நீ நிச்சயமாக அறிந்துகொள் என்று நான் உன்னைக் யெகோவாமேல் ஆணையிடச் செய்து, உனக்கு மிகவும் உறுதியாகச் சொல்லியிருக்க, அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா?
Hebrews 6:16மனிதர்கள் தங்களைவிட பெரியவர்கள் பெயரில் ஆணையிடுவார்கள்; எல்லா விவாதங்களிலும் உறுதிப்படுத்துவதற்கு ஆணையிடுதலே முடிவு.