The Bible Software
bible.softwareஎசேக்கியேல்எசேக்கியேல் 13 › எசேக்கியேல் 13:17

எசேக்கியேல் 13:17

மனிதகுமாரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனம்சொல்லுகிற உன்னுடைய மக்களின் மகள்களுக்கு எதிராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்:

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Likewise, thou son of man, set thy face against the daughters of thy people, which prophesy out of their own heart; and prophesy thou against them,

In Context

16எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனம்சொல்லி, சமாதானம் இல்லாமல் இருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

18ஆத்துமாக்களை வேட்டையாடும்படி எல்லா கைகளுக்கும் காப்புகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டாக்குகிறவர்களுக்கு ஐயோ, நீங்கள் என்னுடைய மக்களின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடு காப்பாற்றுவீர்களோ?

Read all of எசேக்கியேல் 13

Cross References

Judges 4:4அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.

Isaiah 3:16பின்னும் யெகோவா சொல்கிறதாவது: சீயோனின் பெண்கள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் கவர்ச்சியாகப்பார்த்து, ஒய்யாரமாக நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.

Ezekiel 4:3மேலும் நீ ஒரு இரும்புச்சட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்திற்கும் நடுவாக இரும்புச்சுவராக்கி, அது முற்றுகையாகக் கிடக்கும்படி உன்னுடைய முகத்தை அதற்கு நேராகத் திருப்பி, அதை முற்றுகைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் மக்களுக்கு அடையாளம்.

Ezekiel 20:46மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி, தெற்குக்கு விரோதமாக உன்னுடைய வசனத்தைப் பொழிந்து, தெற்குபுறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி,

Luke 2:36ஆசேருடைய கோத்திரத்தைச் சேர்ந்த, பானுவேலின் மகளாகிய அன்னாள் என்ற பெயர்கொண்ட வயதான ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் திருமணம்செய்து ஏழுவருடங்கள்மட்டுமே புருஷனோடு வாழ்ந்தாள்.

Revelation 2:20ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study எசேக்கியேல் 13:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← எசேக்கியேல் 13:16எசேக்கியேல் 13எசேக்கியேல் 13:18 →