Ezekiel 29:21
அந்த நாளிலே நான் இஸ்ரவேல் மக்களின் கொம்பை முளைக்கச்செய்து, அவர்களுடைய நடுவிலே தாராளமாகப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்து கொள்வார்கள் என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 51:15ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்; 1 அப்பொழுது என்னுடைய வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். 1
Psalms 112:9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; 1 அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும். 1
Psalms 148:14அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும், 1 தம்மைச் சேர்ந்த மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் கொண்டாட்டமாக, 1 தம்முடைய மக்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தினார். 1 அல்லேலூயா.
Jeremiah 23:5இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது தாவீதிற்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பச்செய்வேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ஆட்சிசெய்து, பூமியில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
Ezekiel 24:27அந்த நாளிலேதானே உன்னுடைய வாய் திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனுடன் பேசுவாய்; இனி மவுனமாக இருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.
Ezekiel 29:6அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லோரும் நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் மக்களுக்கு நாணல் கோலாக இருந்தார்களே.