Ezekiel 48:21
பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலத்திற்கும் நகரத்தின் காணிக்கும் இந்த பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும், அர்ப்பணித்த நிலத்தினுடைய இருபத்தைந்தாயிரம் கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைவரையும், மேற்கிலே இருபத்தைந்தாயிரம்கோலின் முன்பாக மேற்கே மத்திய கடல் எல்லைவரைக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரான அது அதிபதியினுடையதாக இருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Ezekiel 34:23அவர்களை மேய்க்கும்படி என்னுடைய தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாக இருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாக இருப்பார்.
Ezekiel 45:7பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கும் நகரத்தின் இடத்திற்கும் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும், பரிசுத்தப் படைப்புக்கு முன்பாகவும், நகரத்தின் இடத்திற்கு முன்பாகவும், அதிபதியினுடைய பங்கு மேற்கிலே மேற்கு பக்கமாகவும் கிழக்கிலே கிழக்கு பக்கமாகவும் இருப்பதாக; அதின் நீளம் மேற்கு எல்லை துவக்கிக் கிழக்கு எல்லைவரை பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் எதிராக இருக்கவேண்டும்.
Ezekiel 48:10வடக்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும், மேற்கே பத்தாயிரம்கோல் அகலமும், கிழக்கே பத்தாயிரம்கோல் அகலமும், தெற்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமானது ஆசாரியருடையதாக இருக்கும்; யெகோவாவுடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
Hosea 1:11அப்பொழுது யூதா மக்களும் இஸ்ரவேல் மக்களும் ஒன்றாகக் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு + 1:11 மறுபடியும் தம் மக்களை நாட்டுவார். வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாக இருக்கும்.