Ezra 2:63
ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
64சபையார் எல்லோரும் ஏகத்திற்கு 42,360 பேராயிருந்தார்கள்.
Cross References
Leviticus 2:3அந்த உணவுபலியில் மீதியாக இருப்பது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.
Leviticus 6:17அதைப் புளித்தமாவுள்ளதாக வேகவைக்கவேண்டாம்; அது எனக்கு செலுத்தப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலவும் குற்றநிவாரணபலியைப் போலவும் மகா பரிசுத்தமானது.
Leviticus 7:16அவன் செலுத்தும் பலி பொருத்தனையாகவோ உற்சாகபலியாகவோ இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் சாப்பிடப்படலாம்.
Leviticus 10:17பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாக இருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் யெகோவாவுடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக அதை உங்களுக்கு கொடுத்தாரே.
Leviticus 22:10“அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் சாப்பிடக்கூடாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் பரிசுத்தமானதில் சாப்பிடக்கூடாது.
Leviticus 22:14“ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் சாப்பிட்டிருந்தால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக சேர்த்து பரிசுத்தமானவைகளுடன் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.