எஸ்றா 7:27
எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிகளுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப்பிரபுக்களுக்கும் முன்பாக எனக்கு தயவு கிடைக்கச் செய்த எங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
2 Chronicles 31:8எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைப் பார்க்கும்போது, யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அவருடைய மக்களாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள்.
Nehemiah 2:8தேவாலயத்தில் இருக்கிற கோட்டையின் கதவு வேலைக்கும், நகரமதிலின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுப்பதற்காகவும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்ததால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.
Nehemiah 7:5அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
Isaiah 60:13என் பரிசுத்த ஸ்தானத்தைச் அலங்கரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு மரங்களும், பாய்மர மரங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதபீடத்தை மகிமைப்படுத்துவேன்.
2 Corinthians 8:16அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட வாஞ்சை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.
Hebrews 8:10அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடு செய்யும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள்.