The Bible Software
bible.softwareGenesisGenesis 24 › Genesis 24:12

Genesis 24:12

“என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற யெகோவாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் நிறைவேறச்செய்து, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And he said, O LORD God of my master Abraham, I pray thee, send me good speed this day, and shew kindness unto my master Abraham.

In Context

11ஊருக்குப் வெளியே ஒரு கிணற்றினருகில், தண்ணீர் இறைக்க பெண்கள் வருகிற சாயங்கால நேரத்தில், ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:

13இதோ, நான் இந்தக் கிணற்றினருகில் நிற்கிறேன், இந்த ஊர்ப் பெண்கள் தண்ணீர் இறைக்க வருவார்களே.

Read all of Genesis 24

Cross References

Genesis 17:7உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.

Genesis 24:42அப்படியே நான் இன்று கிணற்றினருகில் வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய யெகோவாவே, என் பயணத்தை நீர் இப்பொழுது வாய்க்கச்செய்வீரானால்,

Genesis 26:24அன்று இரவிலே யெகோவா அவனுக்குக் காட்சியளித்து: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடுகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமின் பொருட்டு உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகச் செய்வேன்” என்றார்.

Genesis 27:20அப்பொழுது ஈசாக்கு தன் மகனை நோக்கி: “என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாக எப்படி கிடைத்தது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய யெகோவா எனக்குக் கிடைக்கச்செய்தார்” என்றான்.

Genesis 31:42என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடு இல்லாவிட்டால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாக அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கடின உழைப்பையும் பார்த்து, நேற்று இரவு உம்மைக் கடிந்துகொண்டார்” என்று சொன்னான். 1 லாபான் யாக்கோபு உடன்படிக்கை செய்துகொள்ளுதல்

Genesis 32:10அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா உண்மைக்கும் நான் எவ்வளவேனும் தகுதியுள்ளவன் அல்ல, நான் கோலும் கையுமாக இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Genesis 24:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Genesis 24:11Genesis 24Genesis 24:13 →