bible.software › Genesis › Genesis 34 › Genesis 34:6
Genesis 34:6
அந்தநேரத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடு பேசும்படி அவனிடத்திற்கு வந்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Hamor the father of Shechem went out unto Jacob to commune with him.
In Context
5தன் மகளாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவனுடைய மகன்கள் அவனுடைய மந்தையினிடத்தில் வயல்வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வரும்வரைக்கும் யாக்கோபு பேசாமலிருந்தான்.
7யாக்கோபின் மகன்கள் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வயல்வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் மகளோடு உறவுகொண்டு, செய்யத்தகாத புத்திகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர்கள் மனம்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.
Read all of Genesis 34
Cross References
Judges 9:28அப்பொழுது ஏபேதின் மகனான காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனுக்கு பணியாற்றவேண்டியது என்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியதரிசி அல்லவா? சீகேமின் தகப்பனான ஏமோரின் மனிதர்களையே பணிந்துகொள்ளுங்கள்; அவனை நாங்கள் பணிந்துகொள்வானேன்?
This Verse In Other Editions
Study Genesis 34:6