Genesis 9:5
உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; அனைத்து உயிரினங்களிடத்திலும் மனிதனிடத்திலும் பழிவாங்குவேன்; மனிதனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
4இறைச்சியை அதின் உயிராகிய இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம்.
Cross References
Genesis 42:22அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: “இளைஞனுக்கு விரோதமாகப் பாவம் செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேட்காமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவனுடைய இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது” என்றான்.
Exodus 21:12“ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாகக் கொலைசெய்யப்பட வேண்டும்.
Leviticus 19:16உன் மக்களுக்குள்ளே அங்கும் இங்கும் கோள்சொல்லித் திரியாதே; + 19:16 மற்றவர்களுடைய உயிரை சேதப்படுத்தகூடாது பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் யெகோவா.
Leviticus 24:21மிருகத்தைக் கொன்றவன் அதற்கு பதிலாக வேறு மிருகம் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
Numbers 35:17ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால் கல்லெறிந்தவன் கொலைபாதகனாக இருக்கிறான்; அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
Numbers 35:21அவனைப் பகைத்து, தன்னுடைய கையினால் அடித்ததினாலோ, அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும், பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்டவுடன் கொன்றுபோடலாம்.