The Bible Software
bible.softwareIsaiahIsaiah 11 › Isaiah 11:14

Isaiah 11:14

அவர்கள் இருவரும் ஒன்றாகக்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கிழக்குத்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் போரிடுவார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But they shall fly upon the shoulders of the Philistines toward the west; they shall spoil them of the east together: they shall lay their hand upon Edom and Moab; and the children of Ammon shall obey them.

In Context

13எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாக இருக்கமாட்டான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தமாட்டான்.

15எகிப்தின் சமுத்திரமுனையைக் யெகோவா முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலிமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழு ஆறுகளாகப் பிரித்து, மக்கள் கால் நனையாமல் கடந்துபோகச் செய்வார்.

Read all of Isaiah 11

Cross References

Judges 6:3இஸ்ரவேலர்கள் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்குப்பகுதி மக்களும் அவர்களுக்கு எதிராக எழுந்து வந்து;

Isaiah 25:10யெகோவாவுடைய கரம் இந்த சீயோனின் மலையிலே தங்கும்; வைக்கோல் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போகும்.

Isaiah 34:5வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் அழிவிற்கு நியமித்த மக்களின்மேலும், அது நியாயம்செய்ய இறங்கும்.

Isaiah 60:14உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைசெய்த அனைவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் யெகோவாவுடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.

Jeremiah 49:2ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது அம்மோன் மக்களின் பட்டணமாகிய ரப்பாவில் போரின் ஆர்ப்பரிப்பைக் கேட்கச்செய்வேன்; அது பாழான மண்மேடாகும்; அதை சுற்றியுள்ள ஊர்களும் நெருப்பால் சுட்டெரிக்கப்படும்; ஆனாலும் இஸ்ரவேல் தன் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டவர்களின் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும் என்று யெகோவா சொல்லுகிறார்.

Ezekiel 25:14நான் இஸ்ரவேலாகிய என்னுடைய மக்களின் கையினால் ஏதோமியர்களிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என்னுடைய கோபத்தையும், கடுங்கோபத்தையும் ஏதோமுக்கு காட்டுவார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 1 பெலிஸ்தியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 11:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 11:13Isaiah 11Isaiah 11:15 →