Isaiah 14:23
அதை முள்ளம்பன்றிகளுக்குச் சொந்தமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதை அழிவு என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். 1 அசீரியாவிற்கு விரோதமான தீர்க்கதரிசனம்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Kings 14:10ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் தீங்கை வரச்செய்து, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் கூட இல்லாதபடி, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் அழித்து, குப்பை கழித்துப்போடப்படுவதுபோல யெரொபெயாமுக்கு பின்வருபவர்களை அவர்கள் முழுவதும் அழியும்வரை கழித்துப்போடுவேன் என்றார்.
Isaiah 13:21காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், ஆந்தைகள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும்.
Isaiah 34:11நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் அளவுநூலையும், வெறுமையின் தூக்குநூலையும் பிடிப்பார்.
Jeremiah 51:25இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Zephaniah 2:14அதின் நடுவில் மந்தைகளும் வகைவகையான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய மலையுச்சிகளின்மேல் நாரையும் கோட்டானும் இரவில் தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் வெறுமை இருக்கும்; கேதுருமரத் தளங்களைத் திறப்பாக்கிப்போடுவார்.
Revelation 18:2அவன் அதிக சத்தமிட்டு: 1 “மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! 1 அது பேய்களுடைய குடியிருப்பும், 1 எல்லாவித அசுத்தஆவிகளுக்கும் காவல் வீடும், 1 அசுத்தமும் அருவருப்புமுள்ள எல்லாவித பறவைகளுடைய கூடுமானது. 1