Isaiah 30:21
நீங்கள் வலதுபுறமாகச் சாயும்போதும், இடதுபுறமாகச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாக சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Joshua 1:7என் ஊழியக்காரனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்ய கவனமாக இருப்பதற்கு மிகவும் பெலன்கொண்டு திடமனதாக இரு; நீ போகும் இடங்களெல்லாம் புத்திமானாக நடந்துகொள்ளும்படி, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாமல் இருப்பாயாக.
1 Samuel 12:23நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாமல் இருந்தால் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்கிறவனாக இருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருக்கட்டும்; நன்மையும் சரியானதுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.
Psalms 25:8யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்; 1 ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். 1
Psalms 143:8அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், 1 உம்மை நம்பியிருக்கிறேன், 1 நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; 1 உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். 1
Proverbs 4:27வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; 1 உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.
Isaiah 35:8அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.