Isaiah 62:8
இனி நான் உன் தானியத்தை உன் எதிரிகளுக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சைரசத்தை அந்நிய தேசத்தார் குடிப்பதுமில்லையென்று யெகோவா தமது வலது கரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் வாக்குக்கொடுத்தார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
7அவர் எருசலேமை உறுதிப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரை அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.
Cross References
Leviticus 26:16நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பார்வையிழக்கச் செய்கிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும், நோயையும், காய்ச்சலையும் உங்களுக்கு வரச்செய்வேன்; நீங்கள் விதைக்கும் விதை வீணாயிருக்கும்; உங்கள் எதிரிகள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.
Deuteronomy 28:31உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் சாப்பிடுவதில்லை; உன்னுடைய கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப கிடைக்காமற்போகும்; உன்னுடைய ஆடுகள் உன் எதிரிகளுக்குக் கொடுக்கப்படும். விடுவிப்பவர் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
Deuteronomy 32:40நான் என் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி, 1 நான் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவர் என்கிறேன். 1
Isaiah 1:7உங்களுடைய தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக அழிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழான தேசம்போல் இருக்கிறது.
Isaiah 65:21வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.
Jeremiah 5:17அவர்கள் உன் மகன்களும் உன் மகள்களும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும், உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சைப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய பாதுகாப்பான பட்டணங்களைப் பட்டயத்தால் வெறுமையாக்குவார்கள்.