Isaiah 7:13
அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனிதர்களை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
12ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் யெகோவாவைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான்.
Cross References
Numbers 16:9யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம் அருகில் சேரச்செய்யும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும்,
2 Chronicles 21:7யெகோவா தாவீதுக்கும் அவன் மகன்களுக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடு செய்த உடன்படிக்கையின் காரணமாக தாவீதின் வம்சத்தை அழிக்க விருப்பமில்லாமல் இருந்தார்.
Isaiah 1:24ஆகையால் சேனைகளின் யெகோவாவும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்கிறதாவது; ஓகோ, நான் என் எதிரிகளில் கோபம் தணிந்து, என் பகைவர்களை பழிவாங்குவேன்.
Isaiah 25:1யெகோவாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது முந்தின ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
Isaiah 63:10அவர்களோ கலகம்செய்து, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்கு எதிரியாக மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாக போர்செய்தார்.
Jeremiah 6:11ஆகையால் நான் யெகோவாவுடைய கடுங்கோபத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலெங்கும் அதை ஊற்றிவிடுவேன்; ஆண்களும், பெண்களும், முதியவர்களும், மிக வயதானவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.