எரேமியா 1:8
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காப்பதற்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லி,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Be not afraid of their faces: for I am with thee to deliver thee, saith the LORD.
In Context
9யெகோவா தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன்.
Cross References
Exodus 3:12அதற்கு அவர்: “நான் உன்னோடு இருப்பேன்; நீ மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின்பு, நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார். 1 தேவனுடைய நாமம் வெளிப்படுத்தப்பட்டது
Deuteronomy 31:8யெகோவா தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னுடன் இருப்பார்; அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்” என்றான். 1 நியாயப்பிரமாணத்தை வாசித்தல்
Joshua 1:9நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பெலன்கொண்டு திடமனதாக இரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடங்களெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன்னோடு இருக்கிறார்” என்றார்.
Isaiah 51:7நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
Jeremiah 1:17ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிற அனைத்தையும் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கச்செய்யாமல், நீ அவர்கள் முகத்திற்கு பயப்படாதிரு.
Jeremiah 20:11யெகோவாவோ பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னுடன் இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காததினால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கமுடியாத நிலையான வெட்கம் அவர்களுக்கு உண்டாகும்.