எரேமியா 13:14
தகப்பன்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை, இரங்குவதுமில்லையென்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார். 1 சிறையிருப்பின் எச்சரிக்கை
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
15நீங்கள் காதுகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாக இராதேயுங்கள்; யெகோவா விளம்பினார்.
Cross References
Judges 7:20மூன்று படைகளின் மனிதர்களும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,
2 Chronicles 20:23எப்படியென்றால், அம்மோனியரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசத்தாரைக் கொல்லவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாக எழும்பினார்கள்; சேயீர் குடிமக்களை அழித்த பின்பு, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கதாகக் கைகலந்தார்கள்.
Isaiah 9:20வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் சாப்பிட்டாலும் திருப்தியடையமாட்டார்கள்; அவனவன் தன்தன் பிள்ளைகளின் மாம்சத்தைத் தின்பான்.
Jeremiah 6:21ஆகையால் இதோ, நான் இந்த மக்களுக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் தகப்பன்களும், பிள்ளைகளும், நண்பர்களும், அண்டைவீட்டுக்காரனும், ஏகமாக இடறுண்டு அழிவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Jeremiah 16:5ஆகையால், நீ துக்கவீட்டில் நுழையாமலும், புலம்புவதற்க்குப்போகாமலும் அவர்களுக்கு பரிதாபப்படாமலும் இருப்பாயாக என்று யெகோவா சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த மக்களைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Jeremiah 21:7அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் வேலைக்காரரையும், மக்களையும், இந்த நகரத்தில் கொள்ளைநோய்க்கும் பட்டயத்திற்கும் பஞ்சத்திற்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் எதிரிகளின் கையிலும், அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று யெகோவா சொல்கிறார் என்றான்.