எரேமியா 16:10
நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த மக்களுக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: யெகோவா எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கை ஏன் சொல்லவேண்டும் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகச் செய்த எங்கள் பாவம் என்ன என்றும் கேட்பார்களானால்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Kings 9:8அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் + 9:8 இந்த வீடு அழிவின் குப்பை மேடாகும் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, இழிவாகப் பேசி: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.
Jeremiah 2:35ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டு நீங்கிவிட்டது என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினால் நான் உன்னுடன் வழக்காடுவேன்.
Jeremiah 9:11நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தங்குமிடமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாமல் அழித்துப்போடுவேன்.
Jeremiah 22:8அநேகம் மக்கள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன்தன் அருகில் உள்ளவனை நோக்கி: இந்தப் பெரிய நகரத்திற்கு யெகோவா இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.
Hosea 12:8எப்பிராயீம்: நான் செல்வந்தனானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் முயற்சிசெய்து தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான்.