எரேமியா 16:4
மகா கொடிய வியாதிகளால் இறப்பார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்செய்வாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறந்து போவார்கள்; அவர்களுடைய உடல் வானத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 28:22யெகோவா உன்னை நோயினாலும், காய்ச்சலினாலும், வெப்பத்தினாலும், எரிகொப்பளத்தினாலும், வறட்சியினாலும் + 28:22 பட்டயத்தினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியும்வரை இவைகள் உன்னைப் பின்தொடரும்.
1 Kings 21:23யேசேபேலையும் குறித்துக் யெகோவா: நாய்கள் யேசபேலை யெஸ்ரெயேலின் மதில் அருகே தின்னும்.
2 Kings 9:36ஆகையால் அவர்கள் திரும்பிவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது யெகோவா திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,
Psalms 79:2உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும், 1 உமது பரிசுத்தவான்களின் சரீரத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள். 1
Isaiah 5:25ஆகையால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களுக்கு விரோதமாக மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, மலைகள் அதிரத்தக்கதாகவும், அவர்களுடைய பிணங்கள் நடுவீதிகளில் குப்பை போலாகத்தக்கதாகவும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
Jeremiah 7:33இந்த மக்களின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும்; அவைகளை விரட்டுவாரும் இல்லாதிருப்பார்கள்.