Jeremiah 21:1
சிதேக்கியா ராஜா மல்கியாவின் மகனாகிய பஸ்கூரையும், ஆசாரியனான மாசெயாவின் மகனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
2 Kings 22:13கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளுக்காக நீங்கள் போய், எனக்காகவும் மக்களுக்காகவும் யூதா அனைத்திற்காகவும் யெகோவாவிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய முன்னோர்கள் இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்காததால், நம்மேல் பற்றியெரிந்த யெகோவவுடைய கடுங்கோபம் பெரியது என்றான்.
2 Kings 25:18மெய்க்காப்பாளர்களின் தலைவன், பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரர்களையும் பிடித்தான்.
1 Chronicles 9:12மல்கியாவின் மகனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மேரின் மகனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் மகனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,
Nehemiah 11:12ஆலயத்திலே வேலைசெய்கிற அவர்கள் சகோதரர்களாகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் மகன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் மகன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் மகன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
Jeremiah 32:1நேபுகாத்நேச்சாரின் அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்தில் சரியாக யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருடத்தில், யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
Jeremiah 37:1பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாதேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய மகனாகிய கோனியாவின் பட்டத்திற்கு யோசியாவின் மகனாகிய சிதேக்கியா வந்து ஆட்சிசெய்தான்.