Jeremiah 27:21
யெகோவாவுடைய ஆலயத்திலும், யூதா ராஜாவின் அரண்மனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிப்பொருட்கள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
2 Kings 20:17இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது முன்னோர்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
Ezra 1:7நேபுகாத்நேச்சார் + 1:7 நேபுகாத்நேச்சார் பாபிலோனின் இராஜாவாக கிமு 605 லிருந்து 562 வரை ஆட்சி செய்தான். கிமு 597 ல் முற்றுகையிட்டு, கிமு 586 ல் எருசலேமின் ஆலயத்தை அழித்துப்போட்டான். 597 ல் 586 ல் 582 ல் யூதாவிலிருந்து பலரை சிறைப்படுத்தி பாபிலோனுக்கு கொண்டுச் சென்றான். 597 லும் 586 லும் ஆலயத்திலுள்ள விலையேறப்பெற்ற பொருட்களை கொள்ளையடித்து சென்றான் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த யெகோவாவுடைய ஆலயத்து பொருட்களையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.
Isaiah 39:6இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் முன்னோர்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் அனைத்தும் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
Lamentations 1:10அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்; 1 உம்முடைய சபையிலே வரக்கூடாதென்று தேவரீர் விலக்கிய அன்னியர்கள் 1 உமது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதைக் கண்டாள். 1