எரேமியா 31:30
அவனவன் தன்தன் அக்கிரமத்தினாலே இறப்பான்; எந்த மனிதன் திராட்சைக்காய்களை சாப்பிட்டானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Isaiah 3:11துன்மார்க்கனுக்கு ஐயோ, அவனுக்குக் கேடு உண்டாகும்; அவனுடைய கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.
Ezekiel 3:24உடனே தேவனுடைய ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கச்செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி: நீ போய், உன்னுடைய வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு.
Ezekiel 18:20பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்; மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் மகனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.
Ezekiel 33:13பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன்னுடைய நீதியை நம்பி, அநியாயம்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன்னுடைய அநியாயத்திலே மரிப்பான்.
Galatians 6:5அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.
James 1:15பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும்.