The Bible Software
bible.software › எரேமியா › எரேமியா 31 › எரேமியா 31:8

எரேமியா 31:8

இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரவழைத்து, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து அழைத்துவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளும் அவர்களில் இருப்பார்கள்; திரளான கூட்டமாக இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Behold, I will bring them from the north country, and gather them from the coasts of the earth, and with them the blind and the lame, the woman with child and her that travaileth with child together: a great company shall return thither.

In Context

7யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபுக்காக மகிழ்ச்சியாய் கெம்பீரித்து, தேசங்களுடைய தலைவருக்காக ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கச்செய்து, துதித்து: யெகோவாவே, இஸ்ரவேலில் மீதியான உமது மக்களைக் காப்பாற்றும் என்று சொல்லுங்கள்.

9அழுகையுடனும் விண்ணப்பங்களுடனும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதியருகில் தவறாத செம்மையான வழியில் நடக்கச்செய்வேன்; இஸ்ரவேலுக்கு நான் தகப்பனாயிருக்கிறேன், எப்பிராயீம் என் மூத்தமகனாயிருக்கிறான்.

Read all of எரேமியா 31

Cross References

Deuteronomy 30:4உன்னுடையவர்கள் வானத்தின்கீழே கடைசி எல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் தேவனாகிய யெகோவா அங்கே இருக்கிற உன்னை ஒன்றுசேர்த்து, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,

Psalms 98:3அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; 1 பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது. 1

Isaiah 40:11மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாக நடத்துவார்.

Isaiah 43:6நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் மகன்களையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் மகள்களையும்,

Isaiah 52:10எல்லா தேசங்களின் கண்களுக்கு முன்பாகவும் யெகோவா தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லோரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.

Jeremiah 3:18அந்நாட்களில் யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாருடன் சேர்ந்து, அவர்கள் ஏகமாக பாபிலோன் தேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் முற்பிதாக்களுக்குச் சொந்தமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study எரேமியா 31:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← எரேமியா 31:7எரேமியா 31எரேமியா 31:9 →