Jeremiah 37:13
அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, காவற்காரர்களின் அதிபதியாகிய யெரியா என்னும் பெயருள்ள ஒருவன் அங்கே இருந்தான்; அவன் அனனியாவின் மகனாகிய செலேமியாவின் மகன்; அவன்: நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்றுசொல்லி, எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Jeremiah 18:18அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்தில் வேதமும், ஞானிகளிடத்தில் ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்தில் வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனிக்காமல், இவனை தீயவார்த்தைகளால் அவமாக்கிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.
Jeremiah 21:9இந்த நகரத்தில் தங்குகிறவன் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; உங்களை முற்றுகைபோடும் கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப்போய்விடுகிறவனோ பிழைப்பான்; அவன் பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல் இருக்கும்.
Jeremiah 27:12இந்த எல்லா வார்த்தைகளின்படியே நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவுடன் பேசி: உங்கள் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்திற்குக் கீழ்ப்படுத்தி, அவனையும் அவன் மக்களையும் சேவியுங்கள்; அப்பொழுது பிழைப்பீர்கள்.
Jeremiah 36:12அவன் ராஜாவின் அரண்மனைக்குப்போய், காரியதரிசியின் அறையில் நுழைந்தான்; இதோ, அங்கே எல்லாப் பிரபுக்களும் காரியதரிசியாகிய எலிஷாமாவும் செமாயாவின் மகனாகிய தெலாயாவும், அக்போரின் மகனாகிய எல்நாத்தானும், சாப்பானின் மகனாகிய கெமரியாவும், அனனியாவின் மகனாகிய சிதேக்கியாவும், மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்கார்ந்திருந்தார்கள்.
Jeremiah 38:4அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனிதன் கொல்லப்பட அனுமதிக்கவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற போர்வீரர்களிடத்திலும், மற்றுமுள்ள எல்லா மக்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினால் அவர்களுடைய கைகளைத் தளர்ந்து போகச்செய்கிறான்; இவன் இந்த மக்களின் நலனைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.
Jeremiah 38:10அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனிதரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி இறப்பதற்குமுன்னே அவனைக் கிணற்றிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான்.