The Bible Software
bible.software › எரேமியா › எரேமியா 44 › எரேமியா 44:30

எரேமியா 44:30

இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய எதிரியும் அவன் உயிரை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்ததுபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய எதிரிகளின் கையிலும், அவன் உயிரை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thus saith the LORD; Behold, I will give Pharaoh-hophra king of Egypt into the hand of his enemies, and into the hand of them that seek his life; as I gave Zedekiah king of Judah into the hand of Nebuchadrezzar king of Babylon, his enemy, and that sought his life.

In Context

29நான் இவ்விடத்தில் உங்களைத் தண்டிப்பேன் என்று உங்களுக்கு விரோதமாகச் சொன்ன என் வார்த்தைகள் உண்மையாகுமென்று நீங்கள் அறிவதற்கு உங்களுக்கு இதுவே அடையாளம் என்று யெகோவா சொல்லுகிறார்.

Read all of எரேமியா 44

Cross References

Jeremiah 34:21யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் எதிரிகளின் கையிலும், அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும், உங்களைவிட்டுப் பெயர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.

Jeremiah 39:7சிதேக்கியாவின் கண்களைக்கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப்போட்டான்.

Jeremiah 46:13எகிப்துதேசத்தை அழிக்கப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வருவானென்பதைக்குறித்து, எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் யெகோவா சொன்ன வசனம்:

Jeremiah 52:8ஆனாலும் கல்தேயருடைய படைவீரர்கள் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமமான பூமியில் சிதேக்கியாவை நெருங்கினார்கள்; அப்பொழுது அவனுடைய படைவீரர்கள் எல்லோரும் அவனைவிட்டுச் சிதறிப்போயிருந்தார்கள்.

Ezekiel 29:2மனிதகுமாரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுதுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்:

Ezekiel 31:18இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் மரங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் மரங்களுடன் நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, வாளாலே வெட்டுபட்டவர்களுடன் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவனுடைய கூட்டமும் இதுவே என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study எரேமியா 44:30

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← எரேமியா 44:29எரேமியா 44