John 10:32
இயேசு அவர்களைப் பார்த்து: நான் என் பிதாவினாலே அநேக நற்செயல்களை உங்களுக்குக் காட்டினேன், அவைகளில் எந்தச் செயலுக்காக என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
31அப்பொழுது யூதர்கள் மீண்டும் அவர்மேல் கல்லெறியும்படி, கற்க்களை எடுத்துக்கொண்டார்கள்.
Cross References
2 Chronicles 24:20அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் மகனான சகரியாவின்மேல் இறங்கினதால், அவன் மக்களுக்கு எதிரே நின்று: நீங்கள் யெகோவாவுடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதனால் நீங்கள் செழிப்படையமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் யெகோவாவை விட்டுவிட்டதால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.
Psalms 109:4என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், 1 நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன். 1
Matthew 11:5குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
John 5:36யோவானுடைய சாட்சியைவிட மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அது என்னவென்றால், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான செயல்களே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
John 10:37என் பிதாவின் செயல்களை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை.
Acts 10:38நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார்.