Jonah 4:8
சூரியன் உதித்தபோது தேவன் வெப்பமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 10:3அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: “என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் செய்யப்பட்டு, சகல மக்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று யெகோவா சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.
2 Samuel 15:25ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; யெகோவாவுடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நான் அதையும் அவர் தங்கும் இடத்தையும் பார்ப்பதற்கு, என்னைத் திரும்ப வரச்செய்வார்.
1 Kings 21:4இப்படி என்னுடைய முன்னோர்களின் சுதந்திரத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடு சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்கு வந்து, சாப்பிட்டாமல், தன்னுடைய கட்டிலின்மேல் படுத்து, தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.
Job 7:15அதினால் என் ஆத்துமா, 1 நெருக்கப்பட்டு சாகிறதையும், 1 என் எலும்புகளுடன் உயிரோடிருக்கிறதைவிட, 1 மரணத்தையும் விரும்புகிறது. 1
Psalms 121:6பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ 1 உன்னைச் சேதப்படுத்துவதில்லை. 1
Song of Solomon 1:6நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்; 1 வெயில் என்மேல் பட்டது; 1 என் சகோதரர்கள் என்மேல் கோபமாயிருந்து, 1 என்னைத் திராட்சைத் தோட்டங்களுக்குக் + 1:6 அதிக பால் உணர்வுள்ள ஒரு வாலிப பெண்ணை குறிக்கலாம் காவற்காரியாக வைத்தார்கள்; 1 என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை. 1